Category:
Created:
Updated:
உலக நாடுகள் பலவற்றிலும் கொரேனா வைரஸ் பரவி அதிகளவில் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறிவருவதால், தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், உலக அளவில் தினசரி கொரோனா பாதிப்பில் பிரேசில் மீண்டும் முதலிடத்திற்கு வந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் 64, 903- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக 1,783- பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தப்பட்டியலில் இந்தியா 2- ஆம் இடம் வகிக்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டு வரும் வோர்ல்டோ மீட்டர்ஸ் தரவுகளின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,699- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.