சினிமா செய்திகள்
பிரபல நடிகையின் ஆடையை மிதித்ததால் சர்ச்சையில் மாட்டினார் அக்‌ஷய்குமார்
இந்தி சினிமாவின் முன்னணி நடிகர் அக்‌ஷய்குமார். இவர் பாலிவுட்டில் அதிகம் சம்பளம் பெரும் நடிகராக வலம் வருகிறார். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஹீரோவ
’தலைவர் 171’ டைட்டில் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில
ஆபாச நடிகை என்று கூறிய விவகாரம் - கங்கனா ரணாவத் விளக்கம்
பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் ஊர்மிளா மடோன்கர். அதன்பினர், ரங்கீலா, சத்யா, ஜூடோய் உள்ளிட்ட பல படங்கலில் நடித்திருந்தார். இவர
வாய்ப்புக்களை குவிக்கும் பூர்ணிமா ரவி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7 சீசனில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு பூர்ணிமாவிற்கு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன்பே
கர்ப்பமாக இருக்கும் அமலா பால் - நீச்சல் குளம் அருகே நடத்திய போட்டோ ஷூட்
தமிழ் சினிமாவில், மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'மைனா' படத்தின் மூலம் பல இளம் ரசிகர்களின் மனதை கட்டி போட
சுந்தரி சீரியல் நடிகர் அரவிஷுக்கு திருமணம்
சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அரவிஷ் மற்றும் நடிகை ஹரிகா இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமண நிச்சயத
எம்.ஜி.ஆரை விட சிவாஜிக்கு கஷ்டம்: டி.எம்.எஸ்
தான் பாடுவது போல் தெரியாமல் திரையில் தெரியும் அந்த நடிகர் பாடிக்கொண்டு நடிப்பது போல அவர்கள் குரலிலேயே பாடி அசத்தும் திறன் படைத்தவர் டி.எம்.சௌந்திரராஜன
விஜய் டிவியின் காமெடி தொடரான லொள்ளு சபா மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சேசு, இன்று தனது 60வது வயதில் காலமானார்.மாரடைப்பால் கடந்த 10 நாட்களாக சென்ன
கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்
நீயா நானா பாத்திடலாம்!. கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்!.. கடைசியில என்ன நடந்தது!..கவுண்டமணி நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கும்போது நா
டி. எம். சௌந்தரராஜன் வாழ்க்கையில் நடந்த சம்பவம்
"அதிர்ஷ்டம் என்பது எப்போதோ ஒருமுறைதான் கதவைத் தட்டும்."‘தூக்குத்தூக்கி’.சிவாஜி நடிப்பில் இந்தப் படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். படத்தில் மொத்தம் எட்
Zoom செய்து பார்த்த ரசிகர்கள் - சிக்கிய ஸ்ரீலீலா
சில வீடியோக்களை பார்த்து நடிகைகளை கலாய்த்தும் பங்கம் செய்தும் காமெடி வீடியோக்கள் இணையத்தில் வெளி வந்து வைரலாகி வருதை பார்த்திருப்பீர்கள். அந்த வகையில்
ஜாக்கெட் அணியாமல் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டார் பிரியாமணி
பிரியாமணி கடந்து 2010 ஆம் ஆண்டில் முஸ்தபா ராஜ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.திருமணத்திற்கு பிறகு சில வருடம் திரைப்படங்க
Ads
 ·   ·  7395 news
  •  ·  5 friends
  • I

    9 followers

கொரோனா 3வது அலைக்கு 100 கோடி ஒதுக்கீடு – தமிழக முதல்வர்

கொரோனா நோய் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்குத் தேவைப்படும் திரவ மருத்துவ ஆக்சிஜனை வாங்குவதற்காகவும், கொரோனா 3-வது அலை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 

“தமிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு கை கொடுக்கின்ற வகையில் நிதி வழங்க வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததற்கு இணங்க, இன்று வரை 353 கோடி ரூபாய் நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது.

 

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகள், கொரோனா நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என உறுதியளித்தவாறே, இதுவரை பெறப்பட்டுள்ள நிதியிலிருந்து, ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காகவும், மற்ற மாநிலங்களிலிருந்து திரவ ஆக்சிஜனை ரயில் போக்குவரத்து மூலமாக கொண்டு வருவதற்குத் தேவையான கண்டெய்னர்களை வாங்குவதற்காகவும், முதற்கட்டமாக 50 கோடி ரூபாயை வழங்கிடவும், இரண்டாவது கட்டமாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாள்தோறும் 1.6 லட்சம் அளவுக்கு மேற்கொள்ளப்பட்டு வருவதைக் கருத்தில்கொண்டு, இப்பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஆர்டி-பிசிஆர் கிட்-களை வாங்குவதற்கு 50 கோடி ரூபாயை வழங்கிடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே ஆணையிட்டிருந்தார்.

 

சிப்காட் நிறுவனம் மூலம், சிங்கப்பூர் மற்றும் பிற வெளிநாடுகளிலிருந்து ஆக்சிஜன் உருளைகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் இதர மருத்துவக் கருவிகளை வாங்குவதற்கு 41.40 கோடி ரூபாயினையும், கருப்புப் பூஞ்சை நோய் சிகிச்சைக்காக தேவைப்படும் ஆம்போடெரிசின் உள்ளிட்ட அனைத்து உயிர் காக்கும் மருந்துகளை வாங்குவதற்கு 25 கோடி ரூபாயினையும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்தும் ஆணையிட்டிருந்தார்.

 

முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, கொரோனா நோய் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்குத் தேவைப்படும் திரவ மருத்துவ ஆக்சிஜனை வாங்குவதற்காகவும், இந்தத் தொற்றின் மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

  • 885
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads