Category:
Created:
Updated:
இன்று காலை முதல் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
அதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிங்கபூர கிராமசேவகர் பிரிவின் சன்ஹிந்த செவன வீட்டுத்திட்டம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கம்பஹா மாவட்டத்தின் களனி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்பொரள்ள 100 தோட்டம் கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.