பாத்திமாபாபு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தும் வந்தார் பாத்திமாபாபு. அவரும் அவரது கணவரும் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில் மீண்டும் பாத்திமாபாபு ஸ்டெச்சரில் கொண்டு செல்லப்படும் படங்கள் வெளியான நிலையில், அதுகுறித்து பாத்திமாபாபுவே வீடியோ மூலமாக விளக்கம் அளித்திருக்கிறார்.
’’கடந்த மே 1ம் தேதி எனக்கும் என் கணவருக்கும் கொரோனா பாசிட்டிவ் என வந்தது. நான் ஐந்து நாட்களில் குணமாகிவிட்டேன். ஆனால், என் கணவர் குணமாகுவதற்கு 40 நாட்கள் ஆகிவிட்டது. இந்த நிலையில் கடந்த 22ம் தேதி அன்று எனக்கு பின்பக்கத்தில் கடுமையான வலி. கொஞ்சம் கூடல் வலி குறையாததால் மருத்துமனையில் சேர்ந்தேன். அங்கு நடந்த பரிசோதனையில் சிறுநீரகத்தில் கற்கள் இருப்பது தெரியவந்தது. கல்லின் அளவு 7.8 மீட்டர் இருந்ததால் கடந்த 26ம் தேதி அறுவை சிகிச்சை செய்து அகற்றினார்கள். தற்போது நலமுடன் இருக்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.