Category:
Created:
Updated:
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 'மனதின் குரல்' நிகழ்ச்சியில், தடுப்பூசி போடுவதன் அவசியத்தை மக்களிடம் வலியுறுத்தி பேசினார்.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் விகிதம் குறித்த ஒரு வரைபடத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். அதில், 'நீங்கள் 'உங்கள் மனம்' சொல்வதைக் கேட்க விரும்பினாலும், நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் முதலில் தடுப்பூசி கிடைக்கச் செய்யுங்கள். அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்த பிறகு மக்களிடம் உரையாற்றுங்கள்' என மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.