பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவின் கடைசி பாடங்கள்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னத்திரை தொடரில் நடிப்பதற்காக சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலை பகுதியில் உள்ள இவிபி ஃபிலிம் சிட்டிக்கு சென்று வர திருவான்மியூர் வீட்டில் இருந்து செல்வதில் சிரமம் இருந்ததால், படப்பிடிப்பு பகுதிக்கு அருகே உள்ள நசரத்பேட்டையில் உள்ள விடுதியில் அவர் தங்கினார். அவருடன் ஹேமநாத்தும் தங்கினார்.
புதன்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் குளிக்க வேண்டும் என்பதால் ஹேமநாத்தை வெளியே இருக்குமாறு சித்ரா தெரிவித்ததாக கூறப்படுகிறது.
வெகுநேரமாகியும் அறை கதவை சித்ரா திறக்காததால் விடுதி ஊழியர் உதவியுடன் அறையின் மாற்று சாவியை பயன்படுத்தி கதவைத் திறந்ததாகவும் அப்போது, சித்ரா தூக்கிட்ட நிலையில் இருந்ததாக ஹேமநாத் தெரிவித்ததாக காவல்துறையிடம் விடுதி நிர்வாகம் தகவல் கொடுத்தது.
இதையடுத்து காவல்துறையினர் வந்து உடலைக் கைப்பற்றி சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சித்ராவுடன் தனக்கு ஏற்கெனவே பதிவுத்திருமணமாகி விட்டதாக காவல்துறையினரிடம் ஹேமநாத் கூறியதாகத் தெரிகிறது.
சம்பவ நாளுக்கு முன்தினம் நள்ளிரவு வரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சித்ரா மிகவும் ஆக்டிவ் ஆக இருந்துள்ளதும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள நண்பர்களுடன் அவர் இயல்பாக சாட்டிங் செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. ஒரு படத்தையும் அவர் பதிவேற்றம் செய்துள்ளார்.
சித்ராவின் கடைசி பாடம்