
இந்தியன் ப்ரீமியர் லீக் - ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 100 ஓட்டங்களால் வெற்றி
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 100 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 217 ஓட்டங்களை பெற்றது.
மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ரியான் ரிக்கல்டன் அதிகபட்சமாக 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இந்தநிலையில், 218 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 16.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 117 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சார்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் அதிகபட்சமாக 30 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதற்கமைய 2025 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரிலிருந்து இரண்டாவது அணியாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
00