Category:
Created:
Updated:
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலாஹாரிஸ் அரசுமுறை பயணமாக குவாத் மாலாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.
இதற்காக நேற்று மதியம் ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டார்.அவர் சென்ற விமானத்தில் திடீர் என்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதை சரி செய்ய விமானி முயற்சி செய்தார். என்றாலும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. எனவே கமலா ஹாரிஸ் சென்ற விமானம் மீண்டும் அதே விமான நிலையத்துக்கு திரும்பியது. அங்கேயே தரை இறக்கப்பட்டது.
பின்னர் அவர் வேறு ஒரு விமானத்தில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து வேறு விமானத்தில் தனது பயணத்தை கமலா ஹாரிஸ் தொடர்ந்தார். அதில் அவர், திட்டமிட்டபடி குவாத் மாலாவுக்கு சென்றடைந்தார்.