
தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் -பிரதமர் மோடி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார்.
உலகில் உள்ள மற்ற நாடுகளைப் போல இந்தியாவும் கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் கொரோனா மிகப்பெரிய தொற்றுநோய்.
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆக்சிஜன் தேவை உயர்ந்துள்ளது. ஏப்ரல், மே மாதத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிக அளவில் இருந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரெயில் மற்றும் விமானம் மூலம் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது இந்தியாவில் ஆக்சிஜன் உற்பத்தி பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அதிகரித்தபோது, இந்தியா தனது குடிமக்களை எப்படி காப்பாற்றப்போகிறது என உலக நாடுகள் சந்தேகப்பட்டன. உலக நாடுகளின் சந்தேகத்தை , தடுப்பூசி உற்பத்தி செய்ததன் மூலம் தீர்த்துள்ளோம் என்றார்.