கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்துக்கு தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த இறுக்கமான பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது.
கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்துக்கு தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த இறுக்கமான பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது.கிளிநொச்சி மாவட்ட கட்டளைத் தளபதியின் இணைப்பாளர் கேணல் கீத்சிறி இதனை உறுதிப்படுத்தினார்.
இதனையடுத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த இராணுவ காவல் தடைகள் நீக்கப்பட்டு கிராமத்தைவிட்டு எவரும் வெளியேற முடியாது என்று விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.எனினும், நாடு முழுவதும் பொதுவாக விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை இங்கும் நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இணைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் சாந்தபுரம் கிராமத்துக்கு விதிக்கப்பட்டிருந்த இறுக்கமான பயணத்தடையை தளர்த்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களூடாக நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.