
கனேடிய உலோகத்திற்கு இரட்டிப்பு வரி விதிப்பதை நிறுத்த டிரம்ப் முடிவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனேடிய அலுமினியம் மற்றும் உருக்கிற்கான 25% வரியை இரட்டிப்பாக்கும் தனது திட்டத்திலிருந்து இடைநிறுத்த தீர்மானித்துள்ளார்.
ஒண்டாரியோ அரசு மின்சார வரி விதிப்பினை தற்காலிகமாக நிறுத்தியதனைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கனடா மீதான இந்த வரிகளை குறைக்க வாய்ப்புள்ளது," என்று டிரம்ப் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், ஒண்டாரியோ முதல்வர் டக் போர்டை "மிகவும் வலுவான மனிதர்" என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
"அவர் (போர்ட்) இந்த (மின்சார வரியை) அமல்படுத்தியிருந்தால் அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் என குறிப்பிட்டுள்ளார். எனினும் போர்ட் மின்சார விநியோகம் மீது வரி விதிக்கப் போவதில்லை எனவும் இதனால் நான் அதற்கு மரியாதை செலுத்துவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, 25% கனேடிய உலோக வரியை இரட்டிப்பாக்கும் திட்டம் இல்லை என்று வெள்ளை மாளிகை உறுதி செய்தது.
செவ்வாய்க்கிழமை காலை, டிரம்ப் கனேடிய உலோகத்திற்கு 50% வரி விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்தார். "கனடா பெரிய பொருளாதார தண்டனை அனுபவிக்கும்," என அவர் குறிப்பிட்டிருந்தார்.