சட்டவிரோத மணல் அகழ்வுகளை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற உள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் 20 கிராம சேவையாளர் பிரிவுகளிலேயே தொடர்ச்சியான சட்டவிரோத மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இவற்றை கட்டுப்படுத்துவதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த வாராம் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற உள்ளதுகிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள 105 கிராம சேவையாளர் பிரிவுகளில் தற்போது 20 கிராம சேவையாளர் பிரிவுகளில் மாத்திரம் தொடர்ச்சியான சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.இவ்வாறான சட்டவிரோதமாகஅகழ்ந்தெடுக்கப்படும் மணல் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து மணல் கொண்டு செல்வதற்குரிய அனுமதிப்பத்திரமே பயன்படுத்தப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு மணல் கொண்டு செல்லப்படுகின்றது.தற்போதைய கொறனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் நடைமுறையில் இருக்கின்ற பயணத் தடை காலத்தில் குறிப்பாக மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கள் முற்றாக நிறுத்தப்பட்டு இருக்கின்ற நிலையில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து மணல் வடபகுதிக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.திருகோணமலையில் இருந்து வருவதற்கான வழித்தட அனுமதிகளின் படி கிளிநொச்சிக்குள் நுழைவதற்கு முன் ஏ-35 வீதி மற்றும் ஏ-09 வீதிகளில் புநாவ. முல்லைத்தீவு நெத்தலியாறு . இரணைமடு சந்தி ஆகிய பகுதிகளில் பொலிசாரின் சோதனை சாவடிகளில் பரிசோதித்து கையெப்பமிடப்பட வேண்டும் அவ்வாறில்லாது கொண்டு செல்லப்படும் மணல் அல்லது கிரவல் சட்டவிரோதமானது.என்றும் நேற்று முன்தினம் (05-06-2021) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கனிய வளத்திணைகள அதிகாரியால் தெரிவிக்கப்ட்டமை குறிப்பிடத்தக்கது.குறித்த கலந்துரையாடலின்போது ராணுவத்தினர் தற்போது குறிப்பிட்ட சில பிரதேசங்களில் மணல் அகழ்வுகள் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக கண்காணிப்புகள் மூலம் ராணுவத்தினரின் சுற்றுக்காவல் நடவடிக்கைகளின் மூலமும் இந்த சட்டவிரோத மணல் அகழ்வு நிறுத்தப்பட்டிருக்கின்றன எனவும் எதிர்காலத்திலும் தொடர்ந்து இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ள கிளிநொச்சி மாவட்ட கட்டளைத் தளபதி அவர்கள் இது தொடர்பில் தங்களுக்கு தகவல்களை வழங்குகின்ற போது மிக விரைவாக அந்த நடவடிக்கைகளை எடுத்து சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரையான காலப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 211 வாகனங்கள் மற்றும் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 20 கிராம சேவையாளர் பிரிவுகளிலேயே தொடர்ச்சியாக இடம் பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வுகளை கட்டுப்படுத்துவதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த வாரம் மாவட்ட அரச உயரதிகாரிகள் பொலிசார் இரானுவத்தினர் பிரதேச செயலாளர்களை ஒன்று சேர்த்து விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற உள்ளது.