Category:
Created:
Updated:
அக்கறையால் பொலிஸ் புலனய்வுபிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய ஸ்கந்தபுரம் குளக்கரையில் இன்றைய 06.06.2021 தினம் அதிகாலை பசுமாடு ஒன்றினை அனுமதியின்றி இறைச்சிக்காக வெட்டிய குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் இருவர் போலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.நாட்டில் தற்பொழுது பயணத் தடை அமுலில் உள்ள காலப்பகுதியில் கால்நடைகள் அளிப்பது தொடர்ந்த வண்ணம் உள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்கு அக்கரையான் போலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு இன்றைய தினமே கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்கரையான் பொலீஸ் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.