Category:
Created:
Updated:
தற்போது நாட்டில் பயணத் தடை அமுல்படுத்தப்பட்டு இருந்த வேளையிலும் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரித்துள்ளதாக மக்கள் குற்றச்சாட்டு.
அதற்கமைய அதனை தடுக்கும் நோக்கில் தருமபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய 05.06.2021 அன்றைய தினம் இராமநாதபுரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு டிப்பர்களும் கல்மடு நகர் பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர் ஒன்று புளியம்பொக்கனை பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர் ஒன்றும் தருமபுர போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் போலீஸ் விசாரணையின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.