வடமராட்சி கிழக்கு குடாரப்பு கடலில் அனுமதியின்றி கடலட்டை பிடித்தல் தொழிலில் ஈடுபட்ட 29 பேர் கைது
அனுமதியின்றி கடலட்டை பிடித்தல் தொழிலில் ஈடுபட்ட 29 பேர் கைது, 11 படகுகள் மற்றும் வெளியிணைப்பு இயந்திரங்கள் கடலட்டை என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.வடமராட்சி கிழக்கு குடாரப்பு கடலில் இரவு ஒன்பது மணியிலிருந்து கடற்படையினரால் அனுமதியின்றி கடலட்டை பிடித்தல் தொழிலில் ஈடுபட்ட. 29 ஆட்களை கைது செய்ததுடன் 11 படகுகளையும் மற்றும் உபகரணங்கள் என்பவற்றை கடற்படை கைப்பற்றியுள்ளது. அண்மைய நாட்களாக வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் குடாரப்பு மாமுனை போன்ற இடங்களில் கடற்கரையில் வாடி அமைத்து கடலட்டை பிடித்தல் தொழிலில் ஈடுபட்டு வந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.. கைது செய்யப்பட்டவர்கள் யாழ்பாணம் மன்னார் போன்ற பகுதிகளில் இருந்து வந்து தொழிலில் ஈடுபட்டவர்கள் ஆவர். இவர்களை கைது செய்த கடற்படை கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்திற்கு அதிகாரிகளிடம் ஆட்களையும் அவர்களது படகுகள் மற்றும் உபகரணங்களையும் ஒப்படைத்துள்ளனர். கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் கைது செய்தவர்களையும் அவர்களது கைப்பற்றப்பட்ட உபகரணங்களையும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்திற்கு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.