Category:
Created:
Updated:
கடந்த சில நாட்களாக இரத்தினபுரி பிரதேசத்திற்கு கடும் மழை வீழ்ச்சி பதிவான நிலையில் இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தில் காணப்பட்ட தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட மண்சரிவின் காரணமாக கல்லூரியின் பிரதான மண்டபம் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
இவ்விடயம் குறித்து பாடசாலையின் அதிபர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபசெயலாளர் ரூபன் பெருமாளுக்கு அறிவித்ததைத் தொடர்ந்து அவர்,பிரதமரின் இணைப்புச் செயலாளரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமாகிய செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
இவ் விடயம் தொடர்பாக மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கும் தெரிவித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபசெயலாளர் ரூபன் பெருமாள் தெரிவித்தார்.