Zomato ஊழியருக்கும், பிரியாணி கடை உரிமையாளருக்கும் மோதல்
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே முகமது உபைத் என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். ஆன்லைனில் உணவு விநியோகிப்பவரான வினோத் என்பவர் தனியார் பிரியாணி கடைக்கு சென்று தனது ஆர்டர் குறித்து கேட்டுள்ளார்.
உரிமையாளர் உணவை வழங்க நேரம் கடத்தியதாக கூறப்படுகிறது இதனால் தான் கொடுத்த ஆர்டர் தாமதமாகிறதே என பிரியாணி கடை உரிமையாளரிடம் வினோத் கேட்டுள்ளார்.
இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிப்போய் கைகலப்பானது. இதனை எதிர்முனையில் இருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இருவரும் நடுரோட்டில் சண்டையிட்ட காட்சிகள் வைரலாகியது.
சக ஊழியர்கள் இருவரையும் பிரித்து அழைத்து சென்றுள்ளனர். இந்த வீடியோவை கருங்கல்பாளையம் காவல்துறையினர் தகராறுக்கு காரணமான கடைக்கு சென்று கடையின் உரிமையாளரிடமும், தனியார் நிறுவன ஊழியரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
உணவு வர தாமதமானதால் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனையானதாகவும், பின்னர் இருவரும் தவறை உணர்ந்து அதற்கு பிறகு தொடர்ந்து ஆர்டர் எடுத்து பிரியாணிகளை வழங்கி வருவதாக சோமாட்டோ ஊழியர் தெரிவித்தார்.
இருவரும் ஒருவித நெருக்கடி காரணமாக மோதியதாகவும் யாரோ தொழிற்போட்டியின் காரணமாக செல்போன் கேமராவில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வைரலாக்கியதாக தெரிவித்தார்.
ஆர்டர் வர தாமதமானதால் கடை உரிமையாளருக்கும், சோமாட்டோ ஊழியருக்கும் ஏற்பட்ட சண்டை வீதிக்கு வந்தாலும் இருவரும் சமாதானம் அடைந்ததால் பிரச்சனை ஓய்ந்துள்ளது.