
போடான்னு சொல்லிட்டு போயிட்டே இருப்போம் - சீமான்
ஈழ தமிழர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக சர்ச்சைக்குள்ளான பேமிலிமேன் தொடர் நேற்று அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது. இந்த தொடரை தடை செய்ய வேண்டும் என பல அமைப்புகள் கூறி வந்த நிலையில், அதில் இலங்கை தமிழ் போராளிகளுக்கு எதிராக எதுவும் இல்லை என்றும், தொடர் வெளியானதும் பார்த்துவிட்டு தமிழ் அமைப்புகளே பாராட்டும் என்றும் அதன் இயக்குனர்கள் அறிக்கை விடுத்திருந்தனர்.
தற்போது வெளியாகியுள்ள பேமிலிமேன் தொடர் குறித்து பேசியுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “அந்த தொடரில் ஐஎஸ் போன்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுடன் ஈழ போராளிகளை தொடர்புப்படுத்தி காட்சியமைக்கப்பட்டுள்ளதாக கேள்விபட்டேன். ஆப்ரகாம் லிங்கன் சொல்வது போன்று ’குற்றம் குறை கூறுபவர்களை புறந்தள்ள கற்றுக்கொள்’ என்பது போல் “போடா’ என சொல்லிட்டு போய்விடுவோம்” என்று கூறியுள்ளார்.