முல்லைத்தீவு கோட்டை கட்டிய குளம் பிரதான வீதியில் தாழ்பாலத்திற்கான மதகு அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசமாகக் காணப்பட்டுகின்ற துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோட்டை கட்டிய குளம் அம்பல பெருமாள் குளம் உள்ளிட்ட விவசாய கிராமங்களுக்கான போக்குவரத்து வசதிகள் மற்றும் பிரதான பாதை சீரின்மை காரணமாக ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் அன்றாடம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றன.குறிப்பாக பருவ மழை காலங்களில் குறித்த வீதியானது பல இடங்களிலே துண்டிக்கப்பட்டு கிராமங்களுக்கான போக்குவரத்துக்கள் முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில் வாரக்கணக்கில் காணப்படுகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.வருடம் முழுவதும் வெள்ளநீர் தேங்கி காணப்படுவதனால் இதற்கான பாலம் அமைக்கப்படாத நிலையில் அன்றாடம் பல்வேறு சிரமங்களை இந்த மக்களை எதிர் நோக்கி வந்தனர்.தற்போது வடக்கு மாகாண சபையின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியின் கீழ் வீதிஅபிவிருத்தி திணைக்களத்தினால் குறித்த மதகு அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.