
வழிபாட்டு தலங்களுக்கு பிரதமர் தலைமையில் புண்ணிய வசதிகள்
கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் புண்ணிய வசதிகள் கிடைக்காத விகாரைகள் மற்றும் பிற வழிபாட்டு தலங்களுக்கு குறியீட்டு ரீதியில் நன்கொடை பொதிகளை வழங்கும் நிகழ்வு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (3) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.
பயணத்தடை காரணமாக புண்ணிய வசதிகள் கிடைக்காத விகாரைகள் மற்றும் பிற வழிபாட்டு தலங்களுக்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரின் ஆலோசனையின் பேரில் இவ்வாறு புண்ணிய வசதிகள் வழங்கும் செயற்பாடு செயற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக நாடு முடக்கப்பட்ட சந்தர்ப்பங்களிலும், பயணத்தடை விதிக்கப்பட்ட காலத்திலும் பிரதமரின் ஆலோசனைக்கமைய வழிபாட்டு தலங்களுக்கு புண்ணிய வசதிகள் வழங்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் செயற்படுத்தப்படும் இவ்வேலைத்திட்டத்தின் ஊடாக புண்ணிய வசதிகள் கிடைக்காத விகாரைகள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு ´சதொச´ நிறுவனத்தின் ஆதரவுடன் உலருணவு பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்படுகின்றன.