ஆடையின்றி ஒரு மணி நேரம் வீடியோ கால் பேச ரூ.700…
கொரோனா காலம் என்பதாலும், ஊரடங்கு விதிக்கப்பட்டதாலும் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை செல்போன் இல்லாமல் இருப்பதில்லை. வேலை இல்லாமல் இளசுகள் சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்கின்றனர்.
அப்படிப்பட்ட இளசுகளை கவர்ந்திழுக்க பெரிய நெட்வொர்க் ஒன்று ஆன்லைனில் சுற்றி வருகிறது. வாட்ஸ் அப் குழுக்களில் சேவல் குழுவில் சேர்ந்தவர்களுக்கு சிறப்பு சலுகை என்றொரு குறுந்தகவல் அனுப்பப்படுகிறது.
குறுந்தகவலில் உள்ள லிங்க்கை கிளிக் செய்தால் Video call Availabe என்ற குழுவிற்கு அழைத்து செல்லும், அதில் அழகான இளம்பெண்களின் புகைப்படங்கள் பகிரப்படும். அவர்களுடன் பேச ஒரு கட்டணமும், ஆடையின்றி வீடியோ கால் பேச ஒரு கட்டணமும் நிர்ணயிக்கப்படுகிறது.
ஒரு மணி நேரம் வீடியோ காலில் பேச 500 ரூபாயும்… ஆடையின்றி ஒரு மணி நேரம் வீடியோ கால் மூலம் பேச 700 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதம் முழுவதும் பெண்களின் சேவை கிடைக்க வேண்டுமா உடனே ரூ.3000 செலுத்த வேண்டும்.
இதை நம்பிய இளசுகள் பணத்தை செலுத்தியுள்ளனர். பத்தாகுறைக்கு இரண்டு பெண்களே உள்ளனர் முந்துங்கள் என குறுந்தகவல் அனுப்பி இளைஞர்களை உசுபேத்தியுள்ளனர்.
ஸ்பெஷல் ஆபர் என 300 ரூபாய் செலுத்தினால் போதும் என அறிவிப்பு வெளியிட.. 300 ரூபாய்க்கு பிகரா என இளசுகள் பர்சுகளை தடவி பணத்தை அளித்துள்ளனர். ஆனால் இந்த ஆன்லைன் விளையாட்டு பிறகு தான் மெல்ல மெல்ல வெளிச்சத்திற்கு வந்தது.
பணம் செலுத்தியவர்கள் சேவல் குழுவில் இருந்து நீக்கப்படுகின்றனர். ஏன் என கேள்வி கேட்பவர்கள் நம்பரை பிளாக் செய்தும் விடுகின்றனர். இப்படி பல நூறு இளைஞர்களை தினமும் இந்த சேவல் கும்பல் ஏமாற்றி வருகிறது.
பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கூறுகையில், இந்த வாட்ஸ் அப் குரூப்பின் லிங்கை 15 பேருக்கு அனுப்பினால் அவருக்கு 15 நிமிடம் இலவச வீடியோ கால் என சிறப்பு சலுகையும் அறிவிக்கின்றனர். இதனால் இந்த குழுவில் மணிக்கு 10 பேர் புதியதாக இணைவதாகவும், பணம் கட்டியவர்கள் நீக்கப்பட்டு வருவதாகவும் குமுறியுள்ளார்.
அழகை நம்பி ஆஸ்தியை தொலைத்த கதை போல, பணத்தை செலுத்தியவர்கள் பெற்றோரிடமும் சொல்ல முடியாமல் போலீசாரிடமும் சொல்ல முடியாமல் விம்மி தவிக்கின்றனர். பணத்தை திருப்பிகேட்டால் பெற்றோரிடம் கூறிவிடுவதாகவும் மிரட்டுகின்றனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
காவல்துறை உடனடியாக மோசடி கும்பலை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையாக உள்ளது.