தமிழக அரசு வழங்கும் 14 வகையான மளிகைப் பொருட்கள்
தமிழகத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கியுள்ள நிலையில் மேலும் 2000 ரூபாய் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.நாளை முதல் (ஜூன் 3ஆம் தேதி) இந்த பணம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்த செய்திகள் இணையதளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.மளிகை பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்த நிலையில் 14 வகையான பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன் நேற்று முதல் விநியோகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.பொதுமக்கள் டோக்கன் வாங்க ரேஷன் கடைகளுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை என்றும் வீடுகளுக்கே சென்று ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் வழங்கி வருகிறார்கள்.ஜூன் 4ஆம் தேதி வரை டோக்கன் வழங்கப்படும் என்றும் ஜூன் 5-ஆம் தேதி முதல் ரேஷனில் 14 வகை பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. நிர்வாக காரணங்களுக்காக துவரம் பருப்பு மட்டும் வரும் 7ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.14வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தநிலையில், நேற்று முதல் சென்னையில் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 14 வகையான பொருட்கள் பின்வறுமாறு:கோதுமை மாவு -1 கிலோஉப்பு 1 கிலோரவை – 1 கிலோஉளுத்தம் பருப்பு – ½ கிலோசர்க்கரை - ½ கிலோபுளி ¼ கிலோகடலை பருப்பு ¼ கிலோகடுகு 100 கிராம்சீரகம் 100கிராம்மஞ்சள் தூள் 100 கிராம்மிளகாய் தூள் 100 கிராம்டீ தூள் இரண்டு பாக்கெட் 100கிராம்குளியல் சோப் 1( 125 கிராம்)துணி சோப்பு ( 1 (250 கிராம்)