பயங்கரவாத இயக்கம் என்பதாலேயே புலிகளின் தடையை இந்தியா நீடிக்கிறது – அண்ணாமலை
புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்பதாலேயே, இவ்வியக்கத்தை இந்தியா தொடர்ந்தும் தடைசெய்து வருவதாக தமிழக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இதன்போதே அவர் இவ்வாறுதெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
இந்தியாவில் புலிகள் அமைப்பின் தடை நீடிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட விருப்பு வெறுப்பு காரணங்களுக்காக இத்தடை நீடிக்கப்படவில்லை.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை, இலங்கை அரசுடன் நல்லுறவு உள்ளிட்ட பல காரணங்களை மையமாக கொண்டுதான் அந்த அமைப்பின் தடை நீடிக்கப்பட்டுள்ளது.
இது ஏற்கெனவே பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைதான். ஒரு காலத்தில் விடுதலைப் போராட்டமாக ஆரம்பித்த புலிகள் போராட்டம் பின்னர் பல்வேறு பழிவாங்கும் படுகொலைப் பேராட்டமாக மாறியது. இதுகுறித்து பேசுவதற்கு ஒன்றுமில்லை என அவர்தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000