Ads
சபாநாயகர் அசோக ரன்வல குறித்து வெளியான பரபரப்பு செய்தி
சபாநாயகர் அசோக ரன்வல, ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி கற்வில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அசோக ரன்வெல, ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்தவரா என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு அந்தப் பல்கலைக்கழகத்திடம் தகவல்களைக் கோரியுள்ளது.
இந்நிலையில், அசோக ரன்வல என்னும் நபர் தமது பல்கலைகழகத்தில் கல்வி கற்கவில்லை என அப்பல்கலைக்கழகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள குறிப்பிட்டுள்ளார். சபாநாயகர் நாட்டின் உயரிய பதவியான சபாநாயகர் பதவியை அவதூறு செய்துள்ளதாக தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
Info
Ads
Latest News
Ads