மோட்டார் சைக்கிளில் சென்ற தாயையும் மகளையும் கீழே விழுத்தி அல்லைப்பிட்டியில் கொள்ளையர்கள் கொடூரம்
வேலணை அல்லைப்பிட்டி பகுதிக்கு அண்மித்த வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த தாயையும், மகளையும் தள்ளிவிழ்த்தி, கையடக்க தொலைபேசி, பணம் என்பன கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது
குறித்த கொள்ளை சம்பவமானது நேற்று (9) மாலை நடந்துள்ளது.
இதே நேரம் திருட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் யாழ்ப்பாணம் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மண்டைதீவு சந்தி பகுதியல் முன்னர் பொலிஸ் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இதனால் தீவக பகுதியில் பல்வேறு கடத்தல் மற்றும் கொள்ளை சம்பவங்கள் தடுக்கப்படு வந்தது.
ஆனால் அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியானதை தொடர்ந்து, வீதியோர பொலிஸ் சோதனைச்சாவடிகள் நாட்டின் பல பாகங்களிலும் அகற்றப்பட்டன.
இன்னிலையில் மண்டைதீவு கவலரணும் அதன் நோக்கம் ஆரயப்படாடு அகற்றப்பட்டது.
பொலிஸ் சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்டதை தொடர்ந்து சட்டவிரோத செயற்பாடுகள் தலைவிரித்தாடுகின்றன.
மண்டைதீவு சோதனைச்சாவடி அகற்றப்பட்டதை தொடர்ந்து, இந்த பகுதியில் பெண்களிடம் அடிக்கடி வழிப்பறி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்து வருகிறது.
மண்டைதீவு, ஏ9 வீதியில் எழுதுமட்டுவாள், ஆனையிறவு சோதனைச்சாவடிகள் அகற்றப்படடதை தொடர்ந்து கால்நடை கடத்தல் தீவிரமடைந்துள்ளதாக பல தரப்பினரும் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இது அனுர பக்தர்களுக்கு சமர்ப்பணம்.