சினிமா செய்திகள்
வீர தீர சூரன் பட ரிலீஸ் தேதியில் மாற்றம்
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 படங்களுக்கு பிறகு ஒரு ஹிட் கொடுத்த நடிகர் என்றால் அது விக்ரம். சேது படத்திற்கு முன்பு எத்தனையோ படங்களில் நடித்து அந்த
சிகிச்சைக்கு செல்லும் முன்னர் முடி காணிக்கை செய்தார் சிவராஜ் குமார்
கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான ராஜ்குமாரின் மூத்த மகனான சிவராஜ், கடந்த 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் கன்னடம் தாண்டி வெளிமொ
எம்ஜிஆரை ஜெய்சங்கர் எப்படி கூப்பிடுவாருன்னு தெரியுமா?
மக்கள் திலகம், புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல், ஏழைகளின் இதயக்கனின்னு போற்ப்பபடுபவர் எம்ஜிஆர். தனது கருத்துகள் ஒவ்வொன்றும் திரைப்படங்களில் நல்ல பயனுள
தோல்வியால் நிம்மதியை இழந்த சூர்யா
கங்குவா படம் கொடுத்த மிகப்பெரிய தோல்வியால் நிம்மதியை இழந்த சூர்யா படப்பிடிப்பு தளத்தில் சோகமாக இருந்து வருகிறாராம். மேலும் இதிலிருந்து மீண்டு வருவதற்க
47 வயதில் திருமணம் செய்து கொண்ட ‘பாகுபலி’ நடிகர்
பாகுபலி திரைப்படத்தில் நாயகி அனுஷ்காவின் மாமாவாக நடித்திருந்தவர் நடிகர் சுப்புராஜ், கோழையாக இருந்து அதன்பின் வீரமாக மாறி, வீரமரணம் அடைந்த காட்சியில் அ
நடிகை கஸ்தூரி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘உதயநிதி ஸ்டாலின் சினிமா செய்திகள் குறித்து “நான் அவற்றை பார்ப்பதில்லை” என கூறினார். அவர் தனது ரெட் ஜ
ஜமீன் பரம்பரை பெண்ணை மணந்தார் காளிதாஸ் ஜெயராம்
மலையாள நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம் தமிழில் விக்ரம், ராயன் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் காளிதாஸ் ஜெயராமனுக்கு தாரணி காளிங்
சூப்பர் சிங்கரில் மாற்று திறனாளி பாடகியை பாராட்டிய நெப்போலியன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சியில் மாற்று திறனாளி பாடகி ஒருவரின் பாடலை பாராட்டி நெப்போலியன் பேசியிருக்கிற
தமிழ் திரையிலகில் தனி முத்திரை பதித்த எம்.என்.நம்பியார்
'உங்கள் கணவர் சிகரெட் குடிக் கிறாரே, அதற்கு நீங்கள் எதுவும் ஆட்சேபனை சொன்னதில்லையா?''''இல்லீங்க. வருஷத்துக்கு ரெண்டே மாசம்தான் சிகரெட் குடிப்பார். மீத
நடிகர் நாகேஷ் பற்றி சிவகுமார் பகிர்ந்த தகவல்
நாகேஷ் நடிக்காத கம்பெனியோ -அவர் போடாத வேஷமோ- அவரை டைரக்ட் பண்ணாத டைரக்டரோ- அவர் கூட 40 வருடத்தில் நடிக்காத ஹீரோவோ யாருமே இருக்க முடியாது. 1000க்கும் ம
ஓபனாக போட்டுடைத்த தனுஷ்
தனுஷ் கோலிவுட்டில் இப்போது பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக வெளியான ராயன் திரைப்படம் சரியாக போகாவிட்டாலும் தனுஷின் நடிப்பும், ஆக்‌
இயக்குனர் அவதாரம் எடுக்கும் சந்தானம்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த டிடி ரிட்டர்ன்ஸ் மற்றும் வடக்
Ads
 ·   ·  2011 news
  •  ·  0 friends
  • 1 followers

கணவனுக்கு தெரியாமல் கருக்கலைப்பு - நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் 7 வார கருவை அழித்ததாகக் கூறப்படும் பெண் உட்பட சந்தேகநபர்கள் அனைவரையும் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

கணவருக்குத் தெரிவிக்காமல் கருவை அழித்த மனைவி உட்பட சந்தேக நபர்களை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க நேற்று உத்தரவிட்டார்.

கொழும்பு 14, மாதம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் தெமட்டகொட பொலிஸில் செய்த முறைப்பாட்டினை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி நாலக ஜயசிங்க, குறித்த பெண், முறைப்பாட்டாளரைத் திருமணம் செய்துகொள்வதற்கு முன்னர் ஒரு திருமணம் செய்துகொண்டிருந்ததாகவும் அந்தத் திருமணத்தில் அவருக்கு ஒரு குழந்தை இருந்ததாகவும் தெரிவித்தார்.

அந்தத் திருமணத்தில் விவாகரத்து பெற்றதாக போலியான தகவல் வெளியிட்டு முறைப்பாட்டாளரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

திருமணத்தின் பின்னர் குழந்தையுடன் நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் வசிப்பதாகவும் சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

அதன் போது பெண் கர்ப்பம் தரித்ததாகவும், ஆனால் அது கணவனுக்குத் தெரியாது எனவும் சட்டத்தரணி நீதிமன்றில் முன்வைத்த தகவல்களில் தெரியவந்துள்ளது.

கணவருக்கு தெரிவிக்காமல் 7 வாரங்களும் 4 நாட்களும் நிறைவடைந்த கருவை பெண் அழித்துள்ளார். கணவருக்கு பிறிதொரு நபரின் மூலம் தெரியவந்ததையடுத்து, அது தொடர்பில் தெமட்டகொட பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் சட்டத்தரணி நாலக ஜயசிங்க நீதிமன்றில் தெரிவித்தார்.

சட்ட விரோதமாக முன்கூட்டிய சிசுவை அழிப்பது கொலைக்குற்றச்சாட்டுக்கு வழிவகுக்கும் செயல் என சட்டத்தரணி நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த 12 ஆம் திகதி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கருக்கலைப்பு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் பின்னர் கணவருடன் வசித்த நாரஹேன்பிட்டி வீட்டை விட்டு வெளியேறி கொழும்பு மாதம்பிட்டியில் உள்ள வீடொன்றில் வசித்து வருவதாகவும் சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார். இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

000

  • 212
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads