2024 ஆம் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக சபலெங்கா தேர்வு
உலகின் நம்பர் வன் வீராங்கனையான அரினா சபலெங்கா (Aryna Sabalenka) 2024 இல் நான்கு பட்டங்களை வென்றதன் மூலம் ஆண்டின் சிறந்த மகளிர் டென்னிஸ் சங்கம் (WTA) வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
26 வயதான பெலாரஷ்யன் வீராங்கனை கடந்த ஜனவரியில் அவுஸ்திரேலிய ஓபனையும், ஆகஸ்ட்டில் சின்சினாட்டி ஓபனையும், செப்டெம்பரில் அமெரிக்க ஓபனையும் மற்றும் ஒக்டோபரில் வுஹான் ஓபனையும் வெற்றிக் கொண்டார்.
அதேநேரம், 11 மாதங்களான நம்பர் வன் இடத்திலிருந்து இகா ஸ்விடெக் முந்தி கடந்த ஒக்டோபர் மாதம் அரினா சபலெங்கா நம்பர் 1 இடத்தை பிடித்தார்.
காயத்தால் விம்பிள்டன் போட்டியினை தவறவிட்ட நிலையில், ஆகஸ்ட் மாதம் தனது உடல்நிலைக்கு முன்னுரிமை அளிக்க பாரிஸில் நடைபெற்ற 2024 ஒலிம்பிக்கில் இருந்தும் அவர் விலகினார்.
அவர் 56 வெற்றிகள் மற்றும் 14 தோல்விகளுடன் 2024 சீசனுக்கான போட்டிகளை நிறைவு செய்தார்.
சபலெங்கா ஆண்டின் சிறந்த வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
வெற்றியாளர்களை தேர்வு செய்வதற்கு சர்வதேச டென்னிஸ் ஊடகங்கள் வாக்களிக்கின்றமையும் குறிப்பிடத்கத்கது.
000