இலங்கையை வீழ்த்தி தரவரிசையில் முதலிடம் பிடித்த தென்னாப்பிரிக்கா
ஜார்ஜ் பூங்கா செயின்ட் மைதானத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 109 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
348 ஓட்டம் என்ற இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது போட்டியின் நான்காம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ஓட்டங்களை பெற்றிருந்தது.
குசல் மெண்டிஸ் மற்றும் தனஞ்சய டிசில்வா ஆகியோர் தலா 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தனர்.
இதனால், இலங்கையின் வெற்றிக்கு 5 விக்கெட்டுகள் மீதமருந்த நிலையில் 143 ஓட்டங்கள் தேவை என்ற நிலை இருந்தது.
இந்த நிலையில், போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பிக்க நீண்ட நேரம் தாக்கு பிடிக்காத இலங்கை அணியானது மேலதிகமாக 33 ஓட்டங்களை மாத்திரம் பெற்று மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
இதனால் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை தென்னாப்பிரிக்கா 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியதுடன், 2025 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 63.33 புள்ளிகளுடன் முதலிடத்துக்கும் முன்னேறியது.
இதேவேளை, தொடரின் தோல்வி மூலம் இலங்கையின் 2025 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான கனவானது சிதைந்துள்ளது
00