Category:
Created:
Updated:
இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது.
இதன்படி 348 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி இன்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
முன்னதாக தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து, 317 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக பிரபாத் ஜெயசூரிய அதிகபட்சமாக 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
முன்னதாக இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸிற்காக 328 ஓட்டங்களையும், தென்னாப்பிரிக்க அணி 358 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டது. போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் நாளை இடம்பெறவுள்ளது.
00