Ads
மீண்டும் சொந்த மண்ணில் நியூஸிலாந்து அணியை தோற்கடித்த இங்கிலாந்து
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி, வெற்றி பெற்றுள்ளது. இதன்படி அந்த அணி 2 - 0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கிறது.
இன்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் 280 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 6விக்கட் இழப்புக்கு 427 ஓட்டங்களை பெற்று, ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.
நியூஸிலாந்து அணி, தமது முதல் இன்னிங்ஸில் 125 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 259 ஓட்டங்களையும் பெற்று போட்டியில் தோல்வியை தழுவியது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி, 8 விக்கட்டுக்களால் வெற்றி பெற்ற அதேவேளை மூன்றாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
000
Info
Ads
Latest News
Ads