19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடர் - சாருஜன் சண்முகநாதன் சதம்
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் இன்று (01) நடைபெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி 131 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
Sharjah இல் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 243 ஓட்டங்களை பெற்றது. பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் AM Ghazanfar 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்நிலையில் 244 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 28.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Praveen Maneesha 3 விக்கெட்டுகளையும், Newton Ranjithkumar, Viran Chamuditha மற்றும் Vihas Thewmika தலா 2 விக்கெட்டுகளையும், Kugadas Mathulan 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்
000