Ads
நியூசிலாந்து – இலங்கை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடர் - இலங்கை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
கண்டி - பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற குறித்த போட்டி மழைக் காரணமாக 47 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.
இதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 45.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 209 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
பின்னர் 210 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றி இலக்கை கடந்தது.
000
Info
Ads
Latest News
Ads