சினிமா செய்திகள்
 ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து செய்வதாக நேற்று அறிவித்தனர். இதனையடுத்து இந்திய திரையுலகமே அதிர்ச்சியடைந்தது. இரு
சிறையில் தூக்கமின்றி தவிக்கிறார் நடிகை கஸ்தூரி
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரி, முதல் நாளில் தூக்கமின்றி தவித்ததாக சொல்லப்படுகிறது. சிறையில் அவருக்கு வழங்கப்பட்ட உணவையும் குறைந
பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் ரிலீஸானது நயன்தாராவின் கல்யாண கேசட்
இயக்குர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் நயன்தாரா திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற இந்த திருமணத்தின் வீடியோ ஒரு ஆவணப்படமாக உருவாக
தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு
தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில், திரு தனுஷ், பல தவறான விஷயங்களை நேர்மையாக சரி செய்வதற்காக இந்த
நயன்தாராக்கு குவியும் ஆதரவு
நடிகர் தனுசுக்கு எதிராக நடிகை நயன்தாரா குற்றம் சாட்டிய நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு நடிகைகள் பலர் ஆதரவு தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள
தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டார்
நடிகை கஸ்தூரி தமிழகத்தை ஆளும் திமுக மற்றும் திராவிட சித்தாந்தம் பேசுபவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் இந
குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்
குழந்தைகள் தினமான இன்று நமது எதிர்காலமான மழலைச் செல்வங்களுக்கு அடிப்படை உரிமைகளுடன் கூடிய சிறந்த, சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்கிட உறுதியேற்போம் என
புஷ்பா 2 படத்தில் ஸ்ரீலீலா ஒரு பாட்டுக்கு வாங்கிய சம்பளம்
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற படம் புஷ்பா. இதன் இரண்டாம் பாகம் நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்து வந்த ந
அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப் போடப்பட்டிருப்பதாக கூறினார் நடிகை கஸ்தூரி
சமீபத்தில் இந்து மக்கள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவ
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை - ராமாபுரத்தில் உள்ள வீட்டில் அவர் நேற்று இரவு உயிரிழந்தார்.தமிழ் சினிமாவில் பல்வேறு கதாப்பாத்
கங்குவா படத்துக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு
சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாக உள்ளது கங்குவா திரைப்படம். இந்த படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரா
வேட்டையன் படத்தை பின்னுக்குத் தள்ளியது சிட்டாடல்
ரஜினி நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸானது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர்,
Ads
 ·   ·  1808 news
  •  ·  0 friends
  • 1 followers

தொழில் வழங்குவதாக பண மோசடி - கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல்

தென்கொரியாவில் E-8 விசா பிரிவின் கீழ் தொழில் வழங்குவதாக பண மோசடி செய்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

2004ஆம் ஆண்டு முதல் EPS-E9 விசா பிரிவின் கீழ் இலங்கையர்கள் தென்கொரியாவில் பணிபுரிய அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் தென் கொரியாவில் குறுகிய கால வேலைக்காக E-8 விசா பிரிவின் கீழ் தொழிலாளர்களை அனுப்புவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

குறுகிய கால வேலைகளுக்கு தொழிலாளர்களை அனுப்புவது அவசியமானால், இலங்கை தென்கொரிய அரசுகளுடன் உரிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த E-8 விசா பிரிவின் கீழ் தென்கொரியாவில் பணிபுரிய தொழிலாளர்களை அனுப்புவதற்கு இலங்கை அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதுடன் இதுவரை எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

விவசாயம் மற்றும் மீன்பிடி வேலைகளுக்கு E-8 விசா பிரிவின் கீழ் தொழிலாளர்கள் பரிந்துரைக்கப்படுவதில்லை. E-8 விசா பிரிவின் கீழ் தென்கொரியாவில் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று கூறி பல்வேறு நபர்கள் பெருந்தொகை பணத்தை மோசடி செய்துள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதில்லை என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வலியுறுத்தியுள்ளது.

E-8 விசா பிரிவின் கீழ் தொழிலாளர்களை தனியார் துறைக்கு அனுப்ப முடியாது என்றும் தென் கொரிய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த வேலைக்குச் செல்வதற்காக யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம் என்றும் எனவே, E-8 விசா னபிரிவின் கீழ் தென் கொரியாவில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு எந்தவொரு நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ பணம் வழங்குவதைத் தவிர்க்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வேலை தேடுபவர்களைக் கேட்டுக்கொள்கின்றது.

எனவே பண மோசடி செய்பவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவிற்கோ அல்லது 1989 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ தெரிவிக்குமாறு பணியகம் மேலும் கோரியுள்ளது.

000

  • 1560
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads