Ads
பொதுத் தேர்தலில் ஆட்காட்டி விரலில் அடையாளம் - தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்காளர்களுக்கு விரல் அடையாளப்படுத்தும் செயல்முறையை தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதனடிப்படையில், பொது தேர்தலில் வாக்காளர்களுக்கு இடது கை ஆள்காட்டி விரலில் குறியீடு இடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கையில் வெளியிட்டுள்ளதாவது,
முன்னதாக ஜனாதிபதித் தேர்தலுக்காக இடது கையின் சுண்டு விரலில் குறியிடப்பட்டுள்ள நிலையில், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கு இடது கையின் கட்டை விரலைப் பயன்படுத்தவிருப்பதால், பொதுத் தேர்தலில் ஆட்காட்டி விரலை பயன்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இடது கையில் ஆள்காட்டி விரல் இல்லாத வாக்காளர்களின் கட்டை விரலிலோ அல்லது வலது கையில் வேறு ஏதேனும் விரலிலோ குறியீடு இடப்படும் எடினவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
00
Info
Ads
Latest News
Ads