சினிமா செய்திகள்
எம். ஆர். ராதாவின் மனசு..
நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் ஒரு நாள் தன்னோட ஒப்பனையாளர் கஜபதியை அழைத்து கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்து இளங்கோவனைத் தெரியுமா என்று கேட்டார்நல்லா தெ
நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் ஒரு நாள் தன்னோட ஒப்பனையாளர் கஜபதியை அழைத்து கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்து இளங்கோவனைத் தெரியுமா என்று கேட்டார்நல்லா தெ
நடிகர் ரஞ்சித்தின் முன்னாள் மனைவி கூறிய உண்மை
90 ஆம் காலக்கட்டங்களில் பிரபல நடிகர் ரஞ்சித். இவர் இயக்கிய கவுண்டம்பாளையம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகர் ரஞ்சித் 1999
ஷாலின் ஷோயா கட்டிய கனவு வீடு
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ஷாலின் ஷோயா. சில திரைப்படங்களில் நடித்துள்ள இவர் ஒரு சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். மலையாள
தாயின் மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்ட நடிகர்
கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் சரோஜா சஞ்சீவ் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரின் இறுதிச்
மூன்றாவது திருமணம் செய்ய போகும் நடிகர்
இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரரான நடிகர் பாலா  தமிழில் அன்பு என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் சுமாராக ஓடிய போதும், இந்த படத்தில் வரும்
அமெரிக்காவில் ஷார்ட் உடையில் நடிகை அஞ்சலி
தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பாப்புலர் நடிகை அஞ்சலி. அவருக்கு ஏராளம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.தற்போது நியூயார்க்கில் இருக்கும் அஞ்சலி ஷார்ட் உடைய
கங்குவா படம் பற்றிய அப்டேட்
நடிகர் சூர்யா நடித்துள்ள படங்களில் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் படமாக உள்ளது கங்குவா.சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த பட
கனிகாவிற்கு வளையல் அணியும் விழா
கடந்த சில நாட்களுக்கு முன் சினேகன்-கனிகா இருவரும் கர்ப்பமாக இருப்பதாக சந்தோஷ செய்தி வெளியிட்டார்கள். இந்த நிலையில் கனிகாவின் 5வது மாத நிகழ்ச்சி அழகாக
9 நாள் முடிவில் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தின் மொத்த வசூல்
தனக்கு கிடைத்த வாய்ப்பை வேட்டையன் என்ற படத்தை இயக்கி தனது திறமையை வெளிக்காட்டி இருக்கிறார் ஞானவேல்.இப்படத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரி
நடிகை ரம்யா கிருஷ்ணன் விவகாரத்து செய்கிறாரா?
தமிழில் 1983ம் ஆண்டு வெளியான வெள்ளை மனசு என்கிற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.ஐட்டம் டான்ஸ், அம்மன் வேடம், போல்டான கதாபாத
எஸ்.எஸ் சந்திரன் வேண்டாம்; கவுண்டமணியை போடுங்க - நடிகர் ராமராஜன்
கரகாட்டக்காரனில் கண்டிஷன் போட்டு ஜெயித்த ராமராஜன்கரகாட்டக்கரன் படத்தில் கவுண்டமணி இல்லை என்றால் நான் படத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று ராமராஜன்
Ads
 ·   ·  1673 news
  •  ·  0 friends
  • 1 followers

சம்பள அதிகரிப்பை வழங்க முடியாவிட்டால், அதற்காக ஒதுக்கப்பட்ட பணம் எங்கே? - வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் வலியுறுத்து

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதி அமைச்சர் என்ற ரீதியில் தாம் எடுத்த அமைச்சரவைத் தீர்மானத்தை உடனடியாக சமகால அரசு அமுல்படுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சம்பள அதிகரிப்பை வழங்க நாம் திட்டமிட்டிருந்தோம்.

சம்பள அதிகரிப்பை வழங்க முடியாவிட்டால், அதற்காக ஒதுக்கப்பட்ட பணம் எங்கே என்பதை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

அரசமைப்பின் 43 ஆவது சரத்தின் கீழ் அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த நாம் தீர்மானம் எடுத்திருந்தோம். அனைத்து அரச ஊழியர்களிடமிருந்தும் பெறப்பட்ட கோரிக்கைகளைப் பரிசீலித்து சம்பள அதிகரிப்பை வழங்கத் தீர்மானித்திருந்தோம்.

சம்பள உயர்வுக்கான கோரிக்கை நியாயமானது. 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, ஊதியத்தின் மதிப்பு 50 சதவீதம் குறைந்துள்ளது.

மக்கள் மிகவும் நெருக்கடியிலேயே வாழ்ந்தனர். அவர்கள் கடனில் மூழ்க வேண்டியிருந்தது. சிலர் தங்கள் சொத்துக்களை விற்க வேண்டியிருந்தது.

நான் பொறுப்பேற்ற ஆரம்ப காலத்தில் நிவாரணம் கொடுக்கும் நிலை இருக்கவில்லை. அதை நாட்டுக்கு அறிவித்தேன். சிலர் சம்பளத்தை இருபதாயிரம் ரூபாவால் உயர்த்தச் சொன்னார்கள்.

2024 இல் பத்தாயிரம் ரூபா அதிகரிப்பை வழங்கினோம். ஆனால், அந்தப் பத்தாயிரம் ரூபா போதாது. சில குழந்தைகள் காலை உணவு இல்லாமல் பாடசாலைக்குச் செல்கின்றனர்.

எனது நண்பர் விஜித ஹேரத் இதற்கு முன்னர் அமைச்சரவையில் இருந்தார் என நான் நினைக்கவில்லை. அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு எமது அரசு எடுத்த தீர்மானம் முற்றிலும் சட்டபூர்வமானது.

அமைச்சு என்பது ஓர் அமைப்பு. அமைப்புக்குச் சட்டங்கள் இல்லை. அரசமைப்பின் 52 ஆவது பிரிவின் கீழ் அமைச்சரின் தலைமையில் அமைச்சு உள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

00

  • 795
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads