Category:
Created:
Updated:
அனைத்து மாவட்ட காரியாலயங்களிலும் உள்ள உதவி தேர்தல் ஆணையாளர்கள், பிரதி ஆணையாளர்கள் உள்ளிட்ட சகல தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் நாளைய தினம் (28) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், கடந்த தேர்தலின் போது பெற்றுக் கொண்ட அனுபவங்கள், முகங்கொடுத்த பிரச்சினைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
000