ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
இடையூறு செய்தால் ஈரானை அடித்து நொறுக்குவேன் ; ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
“அமெரிக்கா நலனுக்கு இடையூறு செய்தால், ஈரானை அடித்து நொறுக்குவேன்” என ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்பை கொலை செய்ய இரண்டு முறை முயற்சி நடந்தது. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.
ஈரானால், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக உளவுத்துறையினர் எச்சரித்து உள்ளனர். இந்நிலையில் வடக்கு கரோலினாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் பேசுகையில்,
“என்னை கொலை செய்ய இரண்டு முறை முயற்சி நடந்தது. அதில் ஈரான் நாட்டுக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளது.
நான் ஜனாதிபதியாக இருந்தால், உங்களை எச்சரிக்கும் வகையில் எனது நடவடிக்கை இருந்து இருக்கும்.
முன்னாள் ஜனாதிபதிகளையோ அல்லது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களையோ கொலை செய்ய முயற்சித்தால், ஈரானை அடித்து நொறுக்குவேன் என எச்சரிக்கிறேன்.
ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானின் அமெரிக்க வருகை விசித்திரமானது. அவருக்கு அச்சுறுத்தல் உள்ளது என தகவல் வந்ததும், அமெரிக்காவில் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அடுத்த ஜனாதிபதி போகிறவரை மிரட்டும் அவருக்கு அமெரிக்க வீரர்கள் பாதுகாப்பு வழங்குகின்றனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.