Ads
மலேசியாவில் சுரங்கப்பாதையில் 2 மெட்ரோ ரயில்கள் மோதல்
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பெட்ரான் இரட்டை கோபுரம் அருகே கே.எல்.சி.சி ரயில் நிலையம் உள்ளது. இதில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் மெட்ரோ ரயில் ஒன்று பழுதாகி நின்றது. பழுது நீக்கும் பணி நடந்துக் கொண்டிருந்தது. அப்போது அதே பாதையில் எதிர்திசையில் 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்த மற்றொரு ரயில், நின்று கொண்டிருந்த ரயில் மீது பயங்கரமாக மோதியது.
இதில், ரயிலின் பெட்டிகள் நொறுங்கின. பலமாக மோதியதில் ரயிலில் இருந்த பயணிகளில் 213 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதில், 47 பேருக்கு பலத்த காயமும், 166 பேர் லேசான காயங்களுடன் தப்பினார்கள்.
தகவல் தொடர்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்துவிட்டதாக மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 23 ஆண்டில் மலேசியாவில் நடந்த மிகப்பெரிய மெட்ரோ ரயில் விபத்து என்பதும் குறிப்பிடத்தக்கது.
Info
Ads
Latest News
Ads