நீதியான தேர்தலை நடத்த கிராமசேவையாளர்களின் பங்கு அவசியம் – யாழ் அரச அதிபர் வலியுறுத்து
யாழ் தேர்தல் தொகுதியில் நீதியானதும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கு கிராம சேவையாளர்களின் பங்கு அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதிபர் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் புதன்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கிராம சேவையாளர்களுடனான கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் யாழ் தேர்தல் தொகுதியில் தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிற நிலையில் நீதியானதும் நியாயமான தேர்தல் ஒன்றினை நடத்துவதற்கு கிராம சேவையாளர்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதாக காணப்படுகிறது.
தேர்தல்களின் போது பிரதேச நீதியாக வாக்களிப்பு நிலையங்களின் வினை திறனான செயற்பாட்டுக்கு அப்பிரதேச கிராம சேவையாளர்களின் பங்கு அவசியம்
இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்ததன் நோக்கம் ஜனாதிபதி தேர்தலில் கிராம சேவையாளர்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்கும் அவர்கள் பிரதேச ரீதியான வாக்களிப்பு நிலையங்களில் எதிர் நோக்கும் பிரச்சினைகளை கண்டறிந்து தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கும்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுக்கின்ற நிலையில் யாழ் தேர்தல் தொகுதிக்கான ஏற்பாடுகளை உதவி தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ் தலைமையிலான உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக பிரதேச மட்டத்தில் அமைக்கப்படும் வாக்களிப்பு நிலையங்களுக்கும் அங்கு கடமையாற்று உத்தியோகத்தர்களுக்கு அப்பகுதி கிராமசேவையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ஆகவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை நீதியானதும் நியாயமானதுமான தேர்தலாக நடத்துவதற்கு கிராம சேவையாளர்களின் ஒத்துழைப்பு அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்
000