Category:
Created:
Updated:
சௌதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இறுதி தொகுதியினர் இன்று (19) நாடு திரும்பியுள்ளனர்.103 பேர் கொண்ட கைதிகள் குழுவே இவ்வாறு இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் ரியாத் மற்றும் ஜேடாவில் உள்ள முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வருவதற்கான வேலைத்திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதனடிப்படையில் கடந்த மாதம் முதல் 49 பெண்கள் மற்றும் 131 ஆண்கள் உட்பட 180 பேர் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.