Category:
Created:
Updated:
கேரளா மாநிலம் வயநாடு அருகே சூரல்மலைப் பகுதியில் நேற்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 123ஆக உயர்ந்துள்ளது.
நிலச்சரிவில் சிக்கிய 150க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 70 பேரை இன்னும் காணவில்லை என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். வயநாடு சூரல்மலை நிலச்சரிவில் 500 வீடுகள் சிக்கி இருக்கின்றன. இதனையடுத்து இந்த வீடுகளில் சிக்கிய 1000 பேரை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.