
புலிகளின் அடையாளங்களுடன் முன்னெடுக்கப்படும் நினைவுகூரல் நிகழ்வுகளில் பங்கேற்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்
புலிகளின் பெயர், அவர்களது சின்னங்கள் போன்றவற்றை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நினைவுகூரல் நிகழ்வுகளில் பங்கேற்பவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நினைவுகூரல் நிகழ்வுகளில் பங்கேற்பவர்களுக்கு கனடா அல்ல உலகில் எந்தவொரு நாடும் இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றதாக கூறினால் அதனை எதிர்ப்பதாகவும் அதனை நிராகரிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர்வதற்கு எவ்வித தடையும் கிடையாது என்ற போதிலும் பயங்கரவாத இயக்கமொன்றை பிரசாரம் செய்யும் வகையிலான நிகழ்வுகளை அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் இனவழிப்பு இடம்பெறவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களை இலங்கை இராணுவம் அழித்திருந்தால் அதனையே இனவழிப்பு என குறிப்பிடலாம் என தெரிவித்துள்ளார். எனினும் அவ்வாறு இடம்பெறவில்லை எனவும் அவ்வாறான சம்பவமொன்று எப்போதும் இடம்பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போரின் போது சிவிலியன்களை பாதுகாத்துக் கொண்டே முன்நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட போரின் போது புலிகள் பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்திய போதிலும் படையினர் அவர்களை மீட்டிருந்தனர் எனவம் கடந்தகால அரசுகள் போன்றே இன்றைய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும் தெரிவித்துள்ளதுடன் இலங்கையில் இனவழிப்பு மேற்கொள்ளப்பட்டதாக எந்தவொரு நாட்டிலும் சாட்சியங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000