தமிழ் பொது வேட்பாளர் விடயம் - தோல்விக் கலக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமே தவிர தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கானதல்ல - ரங்கேஸ்வரன்!
ஏழு கட்சிகள் சிவில் அமைப்புகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் எனக் கூறப்படுவது தோல்விக் கலக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமே தவிர தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான ஒப்பந்தம் அல்ல என ஈழ மக்கள் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று (30.07.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
சமீபத்தில் சிவில் அமைப்பபுகள் என்று கூறிக்கொள்பவர்களும் சிதறுண்டுபோய் இருக்கின்ற ஏழு குழுக்களும் செய்துகொண்ட ஒப்பந்தமானது மாறிமாறி வந்த அரசுகள் தமிழ் மக்களை ஏமாற்றியது என்பதற்கு அப்பால் இவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றினார்கள் என்பதற்கான உதாரணமாகும்.
இரண்டு நாடுகள் ஒப்பந்தம் செய்வதும் இரண்டு இனம், இரண்டு சமயத்தவர்கள் இரண்டு பிரிவினர் தங்களுக்குள் இணக்கமற்ற சூழல் நிலவுகின்றபோது பொது உடன்படிக்கை செய்துகொள்வது இயல்பானது.
அனால் இங்கு ஏழு குழுக்கள் கட்சியாகவும், சிவில் சமூகத்தவர்கள் என்ற சிலரும் இவ்வாறு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு பெரிதாக ஓர் ஒப்பந்தம் செய்தகொண்டதாக புழகாங்கிதம் அடைந்துவருகின்றனர்.
தமக்குள் ஒற்றுமையின்மை நிலவுவதால் பொது வேட்பாளரை நிறுத்துவதனூடாக சிதறுண்டிருக்கின்ற கட்சிகளை ஒற்றுமைப்படுத்தலாம் என புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தனும், சி.வி.விக்னேஸ்வரனும் ஏற்கனவே ஊடகங்களுக்கு தெரிவித்ததன் பின்னர் இப்போது சிவில் அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமத் செய்ததாகவும் ஏதோ இணக்கப்பாடில்லாத இரு தரப்பினரை ஒருநிலைப்படுத்திய பிரமிதத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆகவே அடுத்தவருடன் நடுப்பகுதிக்கு பின்னர் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை இலக்குவைத்தே உதிரிகள் எல்லாவற்றையும் ஓரணியில் திரட்ட அரங்கேற்றிய நாடகமே தவிர இதனால் தமிழ் மக்கள் இவர்களது சகட்டு மேனி பேச்சுக்களை கண்டுகொள்ள தயாரில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
0000