அரசியல் கூட்டம் ஒன்றில் தாதியர்கள் அவர்களது உத்தியோகபூர்வ சீருடையில் பங்கேற்றமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
தேசிய மக்கள் சக்தியின் கூட்டம் ஒன்றில் தாதியர்கள் அவர்களது உத்தியோகபூர்வ சீருடையில் பங்கேற்றமை தொடர்பில் பல தரப்பினர் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.
சட்டத்தரணி தனுக கஹந்தகமகே, கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மாகில் உள்ளிட்ட தரப்பினர் இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளனர்.
மஹரகம இளைஞர் சேவைகள் மன்ற வளாகத்தில் அண்மையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் தாதியர்கள் பங்கேற்பதற்காக வேதனத்துடன் கூடிய விடுமுறை வழங்க சுகாதார அமைச்சு அனுமதியளித்திருந்தமை தொடர்பான கடிதம் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன சார்பில் கட்டுப்பாட்டாளர் பிரிவின் பணிப்பாளர் எம்.எல்.எம் அன்வர் அலியின் கையொப்பத்துடன் அந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தாதியர்களுக்கு அன்றைய தினம் வேதனத்துடன் கூடிய விடுமுறை மற்றும் தொடருந்து பயணச் சீட்டை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.