Category:
Created:
Updated:
கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 340 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அடையாள அட்டையின் இறுதி இலக்க முறையை கடைப்பிடிகாத குற்றச்சாட்டில் 99 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.அதனடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரையில் 10,413 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்று (19) ஒற்றை இலக்க தினம் எனவும் அதனால் அடையாள அட்டையின் இறுதி இலக்கம் 1,3, 5, 7 மற்றும் 9 ஆகிய இலக்கங்களை கொண்டவர்கள் மாத்திரமே வௌியில் செல்ல முடியும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.