Ads
குறைக்கப்படும் தரங்களின் எண்ணிக்கை - 17 வயதுக்குள் பாடசாலை கல்வியை முடிக்க கல்வி அமைச்சு திட்டம்
2025 ஆம் ஆண்டின் முதல் தவணைமுதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்த முன்மொழிவுகளின் படி, பாடசாலையின் தரங்களின் எண்ணிக்கை 13 இல் இருந்து 12 ஆக குறைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அதன் படி, ஒவ்வொரு மாணவர்களும் 17 வயதிற்குள் பாடசாலை கல்வியை முடிக்க வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், புதிய சீர்திருத்தத்தின் மூலம் தகவல் தொழில்நுட்ப பாடங்கள் படிப்படியாக கட்டாயமாக்க முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, புதிய சீர்திருத்தத்தின் கீழ், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு குறிப்பிட்ட சதவீத புள்ளிகளையும் வழங்கி பரீட்சையை இலகுபடுத்தவும் போட்டியை குறைக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
மேலும், சாதாரண தர பரீட்சைக்கான பாடங்களும் 9 இல் இருந்து 7 ஆக குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
000
Info
Ads
Latest News
Ads