தடுப்பு காவலில் இருந்து விடுவிக்குமாறு கோரி மனு தாக்கல்
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை தடுப்பு காவல் உத்தரவில் இருந்து விடுவிக்குமாறு கோரி உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவின் பிரதிவாதிகளாக பொலிஸ்மா அதிபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், குறித்த திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கடந்த தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் 3 மாத தடுப்பு காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.