Ads
ஜனாதிபதி தேர்தல் - அனைத்து ஏற்பாடுகளும் தயார் என பிரதி தபால்மா அதிபர் அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பணிகளை தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தவுடன், தபால் திணைக்களம் ஆரம்பிக்கும் என பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் தபால் வாக்குகள் விநியோகம் மற்றும் உத்தியோகபூர்வ தேர்தல் அறிவிப்புகள் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
“தபால் வாக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பான முறையில் மாற்றுவதற்கு தபால் திணைக்களம் கடமைப்பட்டுள்ளது.
அனைத்து வீடுகளுக்கும் விநியோகிக்க 8000 பணியாளர்களைக் கொண்ட குழுவொன்றை பயன்படுத்த திட்டமிடப்பட்டுளளோம்.
அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளது” எனவும் பிரதி தபால்மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Info
Ads
Latest News
Ads