வாடகைக் குடியிருப்பாளர்களை காக்கும் புதிய சட்டம்
டொரண்டோவில் வாடகை குடியிருப்பாளர்களை பாதுகாக்கும் நோக்கில் புதிய சட்டம் உருவாக்கப்பட உள்ளது. வாடகை குடியிருப்பாளர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் சில அநீதியான விடயங்களை கருத்தில் கொண்டு இந்த புதிய சட்டம் உருவாக்கப்பட உள்ளது.
டொரண்டோ நகர பேரவையினால் இந்த புதிய சட்டம் குறித்து யோசனை முன்மொழிப்பட உள்ளது. குறிப்பாக டொரண்டோவில் வாடகைக்கு குடியிருப்போரை, வீட்டு உரிமையாளர்கள் திடீரென வீட்டை விட்டு வெளியேற்றுவதனை தடுக்க புதிய சட்டம் உருவாக்கப்பட உள்ளது. வீடுகளை பழுது பார்ப்பதாக அல்லது புதுப்பிப்பதாக கூறி வாடகை வீட்டில் குடியிருப்போர் வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கூடுதல் தொகைக்கு வீட்டை வாடகைக்கு விடும் நோக்கின் இவ்வாறு வாடகை குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக வீடுகள் புனரமைக்கப்பட உள்ளதாக கூறி ஒப்பந்த காலத்திற்கு முன்னதாகவே வீட்டு உரிமையாளர்களினால் வாடகை குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையினால் வாடகை குடியிருப்பாளர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை தடுக்கும் வகையில் புதிய சட்ட வரைவு குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டமானது எதிர்வரும் 2025 ஆம் ஆண்டளவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.