Category:
Created:
Updated:
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று புதிதாக 33075 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து தினசரி பாதிப்பு 33 ஆயிரத்தை கடந்துள்ளது.
20,486 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 335 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனையில் 183 பேரும், தனியார் மருத்துவமனையில் 152 பேரும் உயிரிழந்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக 16,31,291 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,31,596 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 13,81,69 பேர் குணமடைந்துள்ளனர். 18,005 பேர் உயிரிழந்துள்ளனர்.